ஹைப்பர்லூப்: வேகம் தடை இல்லை

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வதில் எனக்கும் (பலரைப் போல) ஆர்வம் உள்ளது. அந்த தொழில்நுட்பம் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறது, எப்பேற்பட்ட சவால்களைக் கடந்து வரவிருக்கிறது, சமூக மற்றும் தனிமனித உளவியல் ரீதியாக என்னென்ன மாற்றங்களை கொண்டுவரவிருக்கிறது என்று பல கோணங்களில் பார்ப்பதில் ஒரு வியப்பு இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பம் தான் இந்த ஹைப்பர்லூப். உலகின் போக்குவரத்துத் துறையை மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் வடிவமைப்பு, செயலாக்கம் ஆகியவற்றில் கடந்து வந்த, வரவேண்டிய சவால்கள் பல இருக்கின்றன. அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சொல்வனம் இணைய இதழில் அந்தக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. நன்றி சொல்வனம்

சுட்டி : http://solvanam.com/?p=48682